நியூயார்க்

மெரிக்காவில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.

சுமார் 28 வயதாகும் லஸ்டின் இமானுவேல் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஆவார்.  கடந்த ஜூலை 31 ஆம் தேதி லஸ்டின் இமானுவேல்  10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். லஸ்டின் இந்த திருமண விழாவைக் கடற்கரையில் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டம் தொடர்பான காணொளியை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல், “இன்று நான் பத்து பெண்களை மணந்தேன்.. அனைவரும் என் மனைவிகள்” என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

சுமார் ஒன்பது வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் ஒன்பது மணப்பெண்கள் தங்கள் மாப்பிள்ளையைச் சுற்றி வருவது இடம்பெற்றுள்ளது. அப்பெண்கள் கவர்ச்சியாக, குட்டையான, வெள்ளை ஆடைகளை அணிந்து கையில் பூங்கொத்து வைத்து உள்ளனர். லஸ்டினின் மடியில் ஒரு  மணமகள் அமர்ந்திருந்தார்.

இளைஞர் லஸ்டின் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் ஆவார். இவர் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார். டிக்டாக்கில் அதிக பாலோவர்கள் உள்ள இவர் வெளியிட்டு உள்ள திருமண வீடியோவுக்கு 5,81,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்து உள்ளன.

ஏற்கனவே லஸ்டினின் சமூக வலைத்தளத்தில் பல ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.