அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வரும் வழியில் இத்தாலி தலைநர் ரோமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு தனது சமூக வலைதளத்தில் அவரது பதிவை பகிர்ந்த சிலர் அவரது மனைவி உஷா வான்ஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் ரோமில் இருந்தபடி வாடிகன் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட வான்ஸ் கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்ஸை சந்திக்க முயற்சி மேற்கொண்டார்.

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்தது மற்றும் நன்கொடைகளை நிறுத்த அமெரிக்கா உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எதிராக போப் பிரான்சிஸ் குரல் கொடுத்த நிலையில் வாடிகன் மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த நிலையில் ஜே.டி. வான்ஸ் சந்திப்பு குறித்து பதிலேதும் அளிக்காத வாடிகன் நிர்வாகம் திடீரென நேற்றிரவு போப்-பை சந்திக்க வான்ஸுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த சந்திப்பு முடிந்த பிறகே இதுகுறித்து வாடிகன் செய்தி வெளியிட்டது.

கிருத்துவராக பிறந்திருந்தும் கிருத்துவத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருந்த வான்ஸ் கடந்த 2019ம் ஆண்டு கத்தோலிக்க கிருத்துவராக ஞானஸ்தானம் பெற்ற நிலையில் போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகின் முக்கிய அரசியல் தலைவர் என்ற பெருமையை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பெறுவது குறிப்பிடத்தக்கது.