அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

‘இந்த மாத இறுதியில் வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியுமான உஷாவுடன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார்’ என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான பிறகு வான்ஸின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவர் கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியான பிறகு முதல் முறையாக உஷா தனது பெற்றோரின் சொந்த நாட்டிற்கு வருகை தருகிறார்.

உஷாவின் பெற்றோர்களான கிரிஷ் சிலுகுரி மற்றும் லட்சுமி சிலுகுரி ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 1970களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.

வழக்கறிஞர்களான உஷா மற்றும் வான்ஸ் இருவரும் யேல் சட்டப் பள்ளியில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் போகும் இந்திய ‘அல்லுடு’ வான்ஸ்