வாஷிங்டன்:

1989ம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு பின்னர் மாயமானவர்களின் முழு பட்டியலை வெளியிடுமாறு சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

1989ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் போராட்ம் நடந்தது. இதை கட் டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது நடந்த தாக்குதல் பலர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையால் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா வெளியிடாமல் உள்ளது.

‘‘சீனாவின் இந்த செயல் காரணமாக அந்நாட்டுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் இறந்தவர்கள் விபரம், மாயமானவர்கள் விபரம், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விபரங்களை சீனா வெளியிட வேண்டும்’’ என்று சமீபத்தில் அமெரிக்க அரசின் செயலாளராக பதவியேற்ற மைக் போம்பியோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.