வாஷிங்டன்

ஆப்கானில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு தாலிபான்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்க அமெரிக்கப்படைகள் அங்கு சென்றன.   சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து அமெரிக்கப்படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்தது.  

அதையொட்டி தாலிபான்கள் மீண்டும் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்கப் படைகள் விலகிக் கொள்ள ஆகஸ்ட் 30 ஆம் தேதி கடைசி தினமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க  படைகள் சென்றன.   நேற்று அமெரிக்கப் படையின் கடைசி வீரர் அங்கிருந்து கிளம்பி உள்ளார்.   நேற்றுடன் அங்கிருந்த 1,23,000க்கும் மேற்பட்ட அனைத்து படை வீரர்களும் அமெரிக்கா திரும்பி உள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அமெரிக்க மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.   அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்பியதைத் தாலிபான்கள் வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டாடி உள்ளனர்.