தெஹ்ரான்: ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது அமெரிக்கா பங்கர் – பஸ்டர் குண்டு வீசி  தாக்குதல் நடத்தியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக விரைவாக உடன்பாடு எட்டாவிடில், ஈரானின் மிக முக்கிய வாழ்வாதாரக் கட்டமைப்புகளை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். மேலும்,  ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை தகர்த்தழிப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில்,  ஈரானின் மிகப் பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து  2026ம் ஆண்டு  பிப். 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது

.இருப்பினும், ஈரான் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதி இல்லாமல் சென்றால் தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்து வருகிறது.  மேலும் அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில், , இந்திய நேரப்படி இன்று காலை 6.20 மணியளவில் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் காணொலி ஒன்றை எதுவும் குறிப்பிடாமல் பகிர்ந்திருந்தார் .இந்த தாக்குதலானது, ஈரானின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கான இஸ்ஃபஹான் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 கிலோ பங்கர் – பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க விமானப் படை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, 900 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளைக் கொண்டு ஈரானின் இஸ்ஃபஹான் நகரை இலக்கு வைத்தது. இஸ்ஃபஹான் என்பது ஈரானின் இராணுவத் தளங்களையும் பாதுகாப்புத் தொழில்துறையையும் தன்னகத்தே கொண்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மையமாகும்.  தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் கிடங்கு, ராணுவம் மற்றும் அணுத் திட்டங்களுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றது.

ஈரானிடம் உள்ள 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், இஸ்ஃபஹான் நகரில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படு கிறது.இந்த நிலையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ஃபஹான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

[youtube-feed feed=1]