பாகிஸ்தான் பிரதமரின் விசேஷ தூதரான முஷாஹித் ஹுசேன் சையத், அமெரிக்க அதிபர் ஒபமாவை அவரது பதவி இன்னும் சில மாதங்களில் முடியப்போவதால் அவரை “வெள்ளைமாளிகையின் விருந்தினர்” என்று அழைத்ததால் அமெரிக்க அரசு அதிகாரிகள் கோபமடைந்தனர்.

nawas_obama

முஷாஹித் ஹுசேன் சையதிடம் காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்காவிடன் தங்களது எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது அவர் “இப்போதைய அதிபர் ஒபாமாவே இங்கு வெள்ளை மாளிகையில் விருந்தினர் போலத்தான் இப்போது தங்கியிருக்கிறார். அவர் 2017 ஜனவரியில் பதவியை விட்டு விலகி புதிய அரசு வந்தவுடன் நாங்கள் இது பற்றி அவர்களிடம் பேசிக்கொள்கிறோம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
“இது பொறுப்பற்ற கேலிக்குரிய பேச்சு” என்று அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளார் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.