பாங்காக்:
து, மாது, சூதாட்டம் உள்ளிட்ட கேளிக்கைகளுக்கு தாய்லாந்தில் 30 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2
தாய்லாந்து மன்னர் பூமிபோல் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவந்தார். 88 வயதான இவர் உடல்நலக்குறைபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில் கேளிக்கைகளுக்கு புகழ் பெற்ற தாய்லாந்தில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னருக்கு அஞ்சலி
மன்னருக்கு அஞ்சலி

அந்நாட்டில் அக்டோபர் 14ம் தேதியில் இருந்து ஒரு வருடத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.  குறிப்பாக 30 நாட்களுக்கு பல்வேறு கேளிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த  முப்பது நாட்களுக்கு கேளிக்கை விடுதிகளான உணவகங்கள், பார், கிளப் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.  அதே போல் கருப்பு நிறத்தை ஒத்த ஆடைகளை அணியவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொது இடங்களில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடை காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். உல்லாச விடுதிகள், இரவு நேர பொழுது போக்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதை மீறி கேளிக்கைவிடுதிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே கேளிக்கை பிரியர்கள், இந்த முப்பது நாட்களுக்கு தாய்லாந்து பயணத்தைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.