அமெரிக்கா: அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக ஒற்றுமை கச்சேரி  

Must read

நியூயார்க்:
மெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் மக்களை  பிளவுபடுத்தும் தன்மை கொண்டதாக இருக்கும் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள லத்தீன் இசைக்கலைஞர்கள்,   அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக இசைக் கச்சேரி நடத்தினர்.
a
அமெரிக்க ஐக்கிய நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் டிரம்ப் மற்றும் ஹிலாரி இருவரும் போட்டியிடுகிறார்கள். வழக்கத்தைவிட, இருவரது பிரச்சாரத்திலும் அனல் தெறிக்கிறது. தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும் நடக்கிறது.  பரஸ்பரம் பாலியல் புகார்களும் வீசப்பட்டன. மேலும் டிரம்ப், அமெரிக்கவாழ் வெளிநாட்டினருக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.
இதை எதிர்க்கும் விதத்தில், மெக்ஸிகோ-அமெரிக்க பாடகர் லில டவுன்ஸ், கொலம்பிய நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் விவெஸ், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாடகரும் பாடாலாசிரியருமான அலகண்ட்ரோ சாந்த் ஆகியோர் இசைக் கச்சேரி ஒன்றை நடத்தினர். இந்த கச்சேரி, கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியகோவையும், மெக்ஸிகோவில் உள்ள டீக்வானாவையும், இணைக்கும் பாதசாரி பாலத்திற்கு அருகில் உள்ள திறந்த வெளிப் பகுதியில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட கலைஞர்கள், “தேர்தல் பிரச்சாரம் என்பது மக்களை பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டனர்.
அதே நேரம், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்க்கும் கச்சேரியாக இந்த நிகழ்ச்சியை பலர் கூறுகிறார்கள்.
 

More articles

Latest article