சென்னை:

சென்னை ஐஐடியில் நடைபெறும் புற்றுநோய் குறித்த ஆய்வு நிகழ்ச்சியில் இருந்து பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமான எம்.டி.ஆன்டர்சன் நிறுவனம் வெளியேறியது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா குரு பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டிருப்பதால்தான், அமெரிக்காவை சேர்ந்த எம்.டி.ஆன்டர்சன் நிறுவனம் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த எம்.டி. ஆண்டர்சன் ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை ஐஐடியில் நடைபெறும் புற்றுநோய் குறித்து உலக அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. ஆய்வு கூட்டத்திற்கு தலைமை விருந்தினராக பிரபல யோகா குருவான பாபா ராம்தேவை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சி மையம் புற்றுநோய்க்கான ஐஐடி-மெட்ராஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  எம்டி ஆன்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையமம், தங்களது லோகோவையும், பெயரையும் எங்களது அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், நாங்கள் ஸ்பான்சர் செய்வதாகவும் விளம்பரப்படுத்தி வருவதாகவும் நிகழ்ச்சி அமைப்பினர் மீது குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் ஸ்பான்சர் இல்லாதபோது, எங்களது லோகோவை பயன்படுத்துவது தவறு, அதை அகற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளோம்  என்று டுவிட் செய்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள், ஏற்கனவே அளிப்பட்டுள்ள நிகழ்ச்சி பட்டியலில், எம்.டி.ஆன்டர்சன் நிறுவனத்தை சேர்ந்த  இரண்டு பேர் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், யோகா குரு பாபா ராம்தேவ் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் எம்.டி.ஆன்டர்சன் நிறுவனம் வெளியேறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

யோகா மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று யோகா குருவான பாபா ராம்தேவ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, அஸ்ஸாம் மாநில சுகாதார மந்திரி ஹிமான்டா பிஸ்வா சர்மாவுடன் ராம்தேவ் ஒப்புக் கொண்டார்,

இதுகுறித்து கூறிய அஸ்ஸாம் அமைச்சர், யோகாவில் பயன்படுத்தப்படும் சின் முத்திரை காரணமாக புற்றுநோய் குணப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.