கருகலைப்புக்கு மரண தண்டனை – ‍அமெரிக்காவில் சட்ட மசோதா தாக்கல்

டெக்சாஸ்: கரு கலைப்பை கிரிமினல் குற்றமாக்கி, அதில் ஈடுபடும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில ரிபப்ளிக்கன், டோனி டின்டர்ஹொல்ட்(ஆர்).

இதன்மூலம், கர்ப்பப்பைக்கு உள்ளும் வெளியும் ஒரு குழந்தையின் வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெறுகிறது என்றுள்ளார் அவர்.

மேலும், அவர் கூறியுள்ளதாவது, “இந்த சட்டத்தின்மூலம், மனிதக்கொலை நடைபெறுவது தடுக்கப்படுவதுடன், பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் பெண்களின் பொறுப்புணர்ச்சியையும் அதிகரிக்கும். பெண்களுக்கு மட்டுல்ல, ஆண்களின் பொறுப்புணர்ச்சியும்தான்.

எப்போது வேண்டுமானாலும் போய் கருவைக் கலைத்துக்கொள்ளலாம் என்ற சுதந்திரம் இருப்பதால்தான், மிக எளிதாக மனிதக்கொலை நடக்கிறது” என்றார்.

கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக இந்த மசோதாவைக் கொண்டுவந்தபோது, கொலை மிரட்டல் வந்ததால், அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த சட்ட மசோதா, கரு கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, கடந்த 1973ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கி தீர்ப்புக்கு எதிரானது.

– மதுரை மாயாண்டி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-