வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அடுத்த மாதம் இந்திய வர உள்ளார்.

இந்தியா 2023ம் ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார்.

அவர் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ, தெரிவித்துள்ளார்

டொனால்ட் லூ,

“வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள அதிபர் ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். அவர் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக  இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.  அடுத்த சில மாதங்களில் என்ன வரப்போகிறது? என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.