அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டர் முகப்பு விளக்கு இல்லாமல் இருளில் பறந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

60 பயணிகளுடன் தரையிறங்க தயாரான அந்த ஜெட் விமானத்தில் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 64 பேர் பயணம் செய்துள்ளனர். தவிர, ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விமான விபத்து தொடர்பாகபதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில், ப்ளாக் ஹாக் ராணுவ ஹெலிகாப்டர் விளக்கை எரியவிடாமல் இருளில் வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், விமான கட்டுப்பாட்டு அறைக்கு அந்த ஹெலிகாப்டர் எந்த உயரத்தில் என்ன வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஆற்றில் விழுந்த அந்த ஹெலிகாப்டரில் யாரும் இருந்ததாக தெரியவில்லை என்று விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறியுள்ளனர்.

இதனால் அமெரிக்க விமான விபத்து சதி வேலையாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.