சோசியல் மீடியா அக்கௌன்ட். மாணவர்களுக்கு அமெரிக்கா செக்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தடாலடியாக அறிவிப்பு மேல் அறிவிப்பு மேலாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏகப்பட்ட வரி விதித்து பல நாடுகளில் அதிர்ச்சி அடைய செய்த லேட்டஸ்ட் அதிரடிதான் இனி வரும் விஷயம்.

அதாவது அமெரிக்காவில் படிக்க விருப்பப்பட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களை சல்லடை போட்டு ஜலிப்பது என்று ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்க நேர்முக தேர்வு நடத்துவதை உடனே நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இதற்கான ஆணையை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பிறப்பித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுகளை நிறுத்தி இருப்பதன் அடிப்படை நோக்கம், அமெரிக்கா வர விரும்பும் மாணவர்களின் சோசியல் மீடியா கணக்குகளை ஆராய்ந்து முடிவெடுக்கத் தான்.

அமெரிக்காவுக்கு எதிராகவும், அமெரிக்க பாதுகாப்புக்கு எதிராகவும் விண்ணப்பதாரர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருக்கிறார்களா? அமெரிக்காவில் அனுமதி அளிக்கும் அளவுக்கு பிரச்சனை இல்லாதவர்களா என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட பிறகே வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கும் எனக்கு தெரிகிறது.

ஏ..அமெரிக்க ஏகாதிபத்தியமே… என்று சமூக வலைத்தளங்களில் சகட்டுமேனிக்கு விமர்சித்து இருந்தால் அப்படிப்பட்டவர்களுக்கு அமெரிக்கா ஸ்டூடண்ட் விசா கிடைப்பது அவ்வளவு சுலபத்தில் இருக்காது என்று தெரிகிறது.

– செய்திப்பிரிவு