வாஷிங்டன்
ஈரான் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் தடைகள் விதுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை ஈரான் விலக்கியது. அதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. ஈரானின் முக்கிய வர்த்தகமான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க அமெரிக்கா முடிவு செய்தது.
அதை ஒட்டி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா தடை செய்தது. அத்துடன் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்;படும் என அமெரிக்கா அச்சுறுத்தல் அளித்தது. இதனால் ஈரானின் எண்ணெய் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது.
இதை ஒட்டி ஈரான் அதிபர் ஹசன் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து மற்ற ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அப்படி இல்லை எனில் அணு ஆயுத முக்கிய பொருளான யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தது.
இது அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலை அதிகரித்துளது. அதனால் இனி ஈரானிடம் இருந்து ஸ்டீல், செம்பு உள்ளிட்ட பொருட்களை யாரும் வாங்கக் கூடாது என தடைவிதித்துள்ளது. ஈரான் நாட்டில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக சுரங்கப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.