நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ரத்துசெய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஏனெனில், உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக திகழ்கிறது. எனவே, அங்கு போட்டி நடத்துவது ஆபத்து என்றே கருதப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் என்று உறுதிசெய்துள்ளார் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ. ‍அதேசமயம், இது காலி அரங்கில்(ரசிகர்கள் இல்லாமல்) நடைபெறும் போட்டி என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.