வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், ஜோ பைடன் தலைமையிலான அரசு, மீண்டும் இணைந்துள்ளது. இது உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015ம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானது. விவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான இந்த ஒப்பந்தத்திற்கு 90-க்கு மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவித்திருந்த நிலையில், பின்னர், 2015ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாட்டில், ஐநாவின் 197 உறுப்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன், தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் அதிபரானால் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தபடி, தற்போது பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இன்று மீண்டும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்று இணைந்துள்ளது .
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததற்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.