நியுயார்க்:
மெரிக்கா “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை” விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் கிட்டத்தட்ட 190 நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தமாகும்.

கடந்த ஆண்டு இதே நாளில் ட்ரம்ப் அரசு, ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான முறையான செயல் முறையை துவங்கியது, கட்டாய ஒரு வருட காத்திருப்பு காலத்திற்கு பின்னர் இன்று அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் அதை கைவிட்ட ஒரே நாடு அமெரிக்காவாகும். அங்கோலா, ஈரான், ஈராக், தெற்கு சூடான், துருக்கி, ஏமன் உள்ளிட்ட பல நாடுகள் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, ஆனால் அதை முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா இதை முறையாக ஏற்றுக் கொண்ட பின்பு இதிலிருந்து தற்போது வெளியேறியுள்ளது.

மேலும் பாரிஸ் ஒப்பந்தத்தில் மீதமுள்ள நாடுகள் எந்த ஒரு தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் இதனை தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.