சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்குள் பிரவேசித்த நான்சி பெலோசி – சீன விமானங்கள் முற்றுகை – போர் பதற்றம்…

Must read

சீன அதிபரின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெரோசி வருகை தந்துள்ளார். இதனால், சீனா போர் விமானங்களைக் கொண்டு தைவானை மிரட்டி வருகிறது. அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் அமெரிக்கா – சீனா இடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது. நான்சி பெலோசி தைவான் சென்றடைந்துள்ள நிலையில் 20 க்கும் மேற்பட்ட சீன இராணுவ விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சென்றுள்ளன. இது குறித்து குறிப்பிட்டுள்ள தீவின் பாதுகாப்பு அமைச்சகம், ‘”21 PLA விமானம் … ஆகஸ்ட் 2, 2022 அன்று தைவானின் தென்மேற்கு ADIZ இல் நுழைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த செயல் டிவிட்டர் சமூக வலைதளத்தில்,  மூன்றாம் உலகப்போர் என ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த திங்கட்கிழமை ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை  தொடங்கினார். இந்த பயணத்தின் போது, அவர் தைவான் செல்வார் எனத் தகவல் வெளியானது. தைவானை உரிமை கொண்டாடி வரும் சீனா, நான்சி பெலோசியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் எச்சரிக்கையை மீறி பெலோசி தைவானுக்கு வந்தால், அது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும் என்றும், தங்களது ராணுவம் சும்மா இருக்காது எனவும் கூறியது. ஆனால்இ, சீனாவின் எதிர்ப்பை மீறி நான்சி பெலோசி தைவானில் தரையிறங்கினார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  அமெரிக்க அவைத் தலைவர் நான்சி பெலோசி வந்திறங்கிய நேரத்தில், தைவான் வான்வெளிக்குள், 21 சீன ராணுவ விமானங்கள் நுழைந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

தைவான் சென்றுள்ள பெலோசி,  அங்கு அதிபர் சாங் இன் வென்னை சந்திக்க இருக்கிறார். இதன்பின்னர், அவர் அமெரிக்கா திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிகழ்ந்து வரும் நிலையில், உக்ரைன் விவகாரம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் எற்பட்டுள்ளது. இது 3வது உலகப்போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக, இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, நெருப்போடு விளையாட வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்தார் என  சீன அரசு ஊடகங்களில் செய்தியாகி வெளியானது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article