கொரோனாவை தடுக்க முழு அடைப்பை அமெரிக்கா நடத்தவில்லை : பில் கேட்ஸ்

Must read

வாஷிங்டன்

கொரோனாவை தடுக்க முழு அடைப்பை நடத்த அமெரிக்கா தவறி விட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைப் பெருமளவில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா வைரஸால் சுமார் 47000 பேர் பாதிக்குப்பட்டுள்ளனர்  கலிஃபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட நகரங்களில் அத்தியாவசிய வர்த்தகம் தவிர மீதமுள்ளவை மூடப்பட்டுள்ளன.   பலர் பணி இழந்துள்ளனர்.

நேற்று உலக கோடிஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் ஒரு ஆன்லைன் கருத்தரங்கில் உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “டிசம்பரில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவது குறித்து தகவல் வெளியான போதிலும், ஜனவரி மாதம் தான்  உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதந்தாகக்த்தினை உணர்ந்தனர்.

உடனடியாக அமெரிக்க அரசு முழு அடைப்பை நடத்தத் தவறி விட்டது,   அமெரிக்க அதிபர் நாட்டில் பொருளாதாரம் மிகவும் சரிந்து வருவதால் ஏப்ரல் மாதம் 12 முதல் வர்த்தகத்தைத் தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.  ஆனால் அது தவறானதாகும்.  முழு அடைப்பு பொருளாதாரத்துக்கு மிகவும் எதிரானது என்றாலும் வேறு வழி ஏதும் இல்லாத நிலை உள்ளது.

உண்மையில் இந்த அடைப்பு சுமார் 6 முதல் 10 வாரங்களுக்கு நடக்க வேண்டும்.   நாட்டில் இறந்தவர்கள் உடல் குவிந்து கிடக்கும் போது மக்களைப் பார்த்து உணவகங்களுக்கு செல்லுங்கள், புது வீடு வாங்குங்கள், இறந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் தாராளமாகச் செலவு செய்யுங்கள் எனச் சொல்வது தவறாகும்.   தற்போது கொள்ளை நோய் பரவி வருவதால் அதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா சோதனைகளை அமெரிக்கா திருத்தி அமைக்க வேண்டும்.  அத்துடன் சோதனைக்குத் தேவையான திறனை மேம்படுத்த வேண்டும்.  நாம் தற்போது சோதனையில் மிகவும் பின் தங்கி  இருக்கிறோம்.  அதைச் சீர் செய்வது மிக மிக அவசரமாகும்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article