வாஷிங்டன்: சாத்தியமான லஞ்சம் தொடர்பாக அதானி குழுமம் மற்றும் நிறுவனர் மீது அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாக   பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.

உலக பணக்காரர்கள் வரிசையில் சமீபத்திய ஆண்டுகளில் சரசரவென மேலேறி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்த இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை வெளியிட்டது,  .அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம். இதனால், அதானி நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறும் அதானி குழுமம், சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தது. ஆனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்,  அதானி நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு ஆதரவாக குரல்எழுப்பின.

 காங்கிரஸ் கட்சி,   ஹிண்டன்பர்க் அறிக்கை முன்னிறுத்தி, அதானி மற்றும் பிரதமர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தது.  “ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் குறித்த ஆய்வறிக்கை குறித்து ஒரு அரசியல் கட்சி வினைபுரிய தேவையில்லைதான். ஆனால், அதானி குழுமம் ஒன்றும் சாதாரண நிறுவனம் அல்ல. பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த போதே அவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் கௌதம் அதானியுடையது. ஆகவே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி விசாரிக்க வேண்டும்,” என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த  உச்சநீதிமன்றம், ஜனவரி 3 ஆம் தேதி தீர்ப்பை அறிவித்தது. மனுதாரர்களின் முக்கிய கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  மூன்றாம் தரப்பு அறிக்கையின் மீதான நம்பிக்கையை நிராகரித்தது மற்றும் வழக்கை செபி கையாள்வதில் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. ஷார்ட் சேல்லிங் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏதேனும் சட்ட மீறல் உள்ளதா என்பதை இந்திய அரசும் செபியும் ஆய்வு செய்து, அப்படியானால், தீர்ப்பின்படி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்தது. இதன்பிறகு அதானி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது  இந்தியாவில்  மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், சிஏஏ சட்டத்தை பாஜக அரசு  அமல்படுத்தி உள்ளதால், அதிருப்தியில் உள்ள நாடுகள், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படத் தொடங்கி உள்ளன.

அதன் எதிரொலியாக,  தற்போது அமெரிக்கா அதான நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை கூறிய அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது விசாரணை நடத்துவதாக ப்ளும்பெர்க் தெரிவித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், அதானி நிறுவனம் அல்லது கெளதம் அதானி உள்ளிட்ட நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள், எரிசக்தி திட்டத்தில் சாதகமான சிகிச்சைக்காக இந்தியாவில் அதிகாரிகளுக்கு பணம் செலுத்துவதில் ஈடுபட்டார்களா என்பதை வழக்கறிஞர்கள் தோண்டி எடுத்து வருகின்றனர், என்றும்,  நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகமும், வாஷிங்டனில் உள்ள நீதித் துறையின் மோசடிப் பிரிவும் விசாரணையைக் கையாள்வதோடு, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அஸூர் பவர் குளோபலையும் கவனித்து வருவதாக  மேலும்  தெரிவித்து உள்ளது.