வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் பெலோசியின் கணவர் மர்ம நபரால் சுத்தியல் தாக்குதலுக்கு ஆளான நிலையில், அவரது தலையில் தையல் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆட்சி காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் சபாநாயகர் நான்சி பெரோசி. இவர் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வருகிறார். டிரம்புக்கு டஃப் கொடுத்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் எதிர்ப்பு நாடான தைவானுக்கு பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், நேற்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நான்சியின் விட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நான்சியின் கணவர் பால் பெலோசியை தலை உள்பட பல இடங்களில் சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தின்போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. இதனால் காயமடைந்த பால் பெலோசியை அவரது குடும்பத்தினரும், பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெலோசிக்கு தலையில் ஏற்பட்ட தாக்குதலில் அவரது மண்டை ஓடு உடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்களுக்கும், டாக்டர்களுக்கும் நான்றி நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பெலோசியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.