வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள் களை அந்நாடு ஒப்படைத்துள்ளது.

அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பாரம்பரிய கலைநயம் மிக்க பொருட்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 297 பழங்கால பொருட்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொல்பொருட்கள் இந்தியாவின் வரலாற்று கலாச்சாரத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, அதன் நாகரிகத்தின் மையத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய பயணத்தின் போது, நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 297 தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின் போது, இந்தியாவிலிருந்து திருடப்பட்ட அல்லது கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருட்களைத் திரும்பப் பெற அமெரிக்கா உதவியது.”
பின்னர், இதை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார். அதில், “கலாச்சார தொடர்பை ஆழப்படுத்துதல் மற்றும் கலாச்சார சொத்துக்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துதல். 297 விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்களை இந்தியாவுக்குத் திருப்பித் தருவதை உறுதி செய்ததற்காக அதிபர் பிடனுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.
கூடுதலாக, அவர் ஜனாதிபதி ஜோ பிடனுடன் திரும்பிய பழங்காலப் பொருட்களின் படங்களை வெளியிட்டார்.
இந்த கலைப்பொருட்கள் திரும்பப் பெறப்படுவதை ஆதரித்ததற்காக ஜோ பிடனுக்கு அவர் நன்றி தெரிவித்தார், அவை இந்தியாவின் வரலாற்று பொருள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, அதன் நாகரிகம் மற்றும் நனவின் மையத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தினார்.
[youtube-feed feed=1]