விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிவைக்கும் போட்டியில் விர்ஜின், அமேசான், டெஸ்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஈடுபட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளி சென்று திரும்பிய நிலையில், வரும் 20 ம் தேதி அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்கிறார்.
அடுத்ததாக, டெஸ்லா நிறுவனத்தின் எலன் மஸ்க், ஸ்பேஸ்-எக்ஸ் என்று பெயரிட்டுள்ள தனது விண்வெளி திட்டத்திற்காக ஸ்டார் ஷிப் எனும் விண்வெளி ஓடத்தை விண்ணுக்கு அனுப்பும் ஏவு தளத்தை நிறுவி வருகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுதளத்தில் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக மாபெரும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரங்கள் மற்றும் ஏவுதளம் அமைந்திருக்கும் இடம் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாக இல்லை என்று அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து, எலன் மஸ்க் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப் படவில்லை.