வாஷிங்டன்:
உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவிக்கு நைஜீரிய நிதி அமைச்சருக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் கோசி ஒகோன்ஜோ இவெலா உலக வர்த்தக அமைப்பின் அடுத்த இயக்குனராக இருப்பதற்கு அமெரிக்கா தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (யுஎஸ்டிஆர்) அறிவித்துள்ளது.
இரண்டு முறை நைஜீரியாவின் நிதி அமைச்சராக இருந்த ஒகோன்ஜோ இவெலா பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், அவருடைய திறமையான தலைமைக்கு அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார், ஆகவே அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அவரை தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் ஜோ பைடன் நிர்வாகம் ஒரு புதிய உலக வர்த்தக அமைப்பின் தலைவருடன் இணைந்து செயல்படுவதற்காக காத்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.