அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் ரஷியா மீது அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. மேலும்,   அமெரிக்காவில் உள்ளது ரஷ்ய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அரசாங்கம் வியாழக்கிழமை, வெளியேற்றியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. மேலும், பதில் நடவடிக்கையாக தனது நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், “எங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற மாட்டோம். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவி ஏற்கும் வரை பொறுத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,  ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்போதாகவும் தெரிவித்துள்ளார்.