வாஷிங்டன்:
மெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோபிடனிற்கும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்க்குமிடையே குடியேற்றம் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

குடியரசு கட்சி வேட்பாளராகவும் தற்போதைய பிரதமராகவும் உள்ள டொனால்டு ட்ரம்ப் 2016-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, குடியேற்ற சட்டங்களை கடுமையாக மாற்றி வந்தார், மேலும் இதனால் தான் குடியேற்ற சட்டங்கள் சிலவற்றையும் மாற்றி அமெரிக்கர்களை முதலில் வைப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத ஒருவர் திடீரென்று அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கும் கிரீன் காடுகளின் சட்டங்களை சிறிது மாற்றி அமெரிக்கர்களுக்கு முதலிடம் கொடுத்து வந்தார்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் உட்பட சிலர் அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நிர்வாகக் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவிற்கு வெளியே இருந்த வெளிநாட்டினருக்கும் பொருந்தும் வகையில் அமைந்தது.

மேலும் கொரோனா தொற்றுநோயால் பணி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கர்களின் வேலையை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

தற்போது மொத்தமாக 1.2 மில்லியன் பேர் கிரீன் கார்டுகாக காத்துக் கொண்டிருக்கின்றனர் அதில் 3, 98,132 பேர் இந்தியர்களாவர். ஆனால் இந்தியர்களுக்கான ஒரு வருடத்திற்கான கிரீன் கார்டு ஒதுக்கீடு 26,000 மட்டுமே.

எது எப்படியாக இருந்தாலும், அதிபர் டொனால்டு டிரம்ப் மட்டும் 2016- ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றத்திற்கான தனது நிலைப்பாட்டை தொடர்ந்து வருகிறார்.

மேலும் தேசிய நலனுக்கு உதவும் குடியேற்ற முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், சட்டப்படி அனைத்தையும் மீட்டெடுப்பதற்கும், நம்முடைய எல்லையை பாதுகாப்பதற்கும் இது ஒரு எல்லை சுவர் எழுப்புவது போன்ற விஷயமாகவுள்ளது, சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்து அவர்கள் அனைவரையும் விரைவாக அகற்றுவதற்க்காகவே குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கினேன் என்று அதிபர் டொனால்டு விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியேற்ற சட்டத்தில் இந்த அனைத்து மாற்றங்களும் தொடரும், ஆனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளரானா ஜோ பிடன் இதைப்பற்றி தெரிவித்திருப்பதாவது, நான் ஆட்சிக்கு வந்தால் இந்த அனைத்து சட்டங்களையும் உடைத்து தங்கள் எதிர்காலத்தை பற்றி பல கனவுடன் இருப்பவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.