அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: இந்திய பெண் சிஇஓ மீது வேலைக்கார பெண் புகார்!

Must read

சான்ஜுவான்:
மெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் இந்த வம்சாவளி பெண் மீது வேலைக்காரர் புகார் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர் ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டுக்கு வேலை செய்ய இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண்ணை அமர்த்தி இருந்தார். இந்த பெண் தன்னை தன்புறுத்துவதாக கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிமான்சு பாட்டியா தனது வீட்டு வேலைக்கார பெண்ணை  ஒரு நாளுக்கு  15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். வார விடுமுறை எதுவும் கொடுப்பதில்லையாம். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார்.

 ஹிமான்சு பாட்டியா
ஹிமான்சு பாட்டியா

உடல் நலமில்லாத நேரங்களில்,  அவரை தன் வீட்டு நாய்களுடன்   தூங்க வைத்து கொடுமை படுத்தியுள்ளார்.  தான் வெளியே செல்கிற நாட்களில் வேலைக்காரப் பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். இதுபற்றி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று கூறி,  அவரது பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துள்ளார்.
இதையடுத்து, இதுபற்றி புகார் தெரிவிக்க எண்ணிய வேலைக்காரப் பெண்  தொழிலாளர் சட்டங்கள் பற்றி இணையதளத்தில் தேடிப்பார்த்திருக்கிறார். அதை அறிந்துகொண்ட ஹிமான்சு பாட்டியா அந்த வேலைக்கார பெண்ணை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
இதுகுறித்து அந்த வேலைக்கார பெண்  ஹிமான்சு பாட்டியா மீது, கலிபோர்னியாவில் உள்ள  அமெரிக்க தொழிலாளர் நலத்துறை மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
 

More articles

Latest article