அமெரிக்க கணினி தொழில் வல்லுநர் ஜான் மெக்காஃப் சிறையில் தற்கொலை

Must read

பார்சிலோனா

மெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப் கடந்த 1980 ஆம் வருடம் கணினிகளுக்கான ஆண்டி வைரஸ் மென்பொருளைக் கண்டுபிடித்தவர் ஆவார்.   இவருக்கு தற்போது 75 வயதாகிறது.   இவர் நியூயார்க்கில் கிரிப்டோ கரன்சி மூலம் மோசடி செய்ததாகவும் வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றியதாகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

ஜான் அமெரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார்.  அவர் பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..  இவர் மீது அமெரிக்காவில் வரி மோசடி மற்றும் பண மோசடி வழக்கு உள்ளதால் இவரை அமெரிக்காவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு கேட்டு கொண்டது.

அதன் அடிப்படையில் ஸ்பானிஷ் உயர்நீதிமன்றம் இவரை நாடு கடத்தி அமெரிக்காவுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்தது.   இவர் வயதானவர் என்பதால் அதிக நாட்கள் சிறையில் இருக்க முடியாது என்னும் அடிப்படையில் அவருடைய தண்டனையை ரத்து செய்ய மேல் முறையீடு செய்ய இருந்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜான் கடந்த 2019 ஆம் ஆண்டு தாம் ஒரு சில காரணங்களுக்காக 8 வருடங்கள் வருமான வரி செலுத்தவில்லை எனத் தெரிவித்திருந்தர். மேலும் அவர் அதே வருடம் அமெரிக்காவை விட்டு இந்த வழக்கைத் தவிர்க்க வெளியேறினார்.  இவர் மீது அமெரிக்காவில் ஒரு கொலை குறித்த விசாரணையும் நிலுவையில் உள்ளது.

கடந்த 2011 ஆம் வருடம் தனது ஆண்டி வைரஸ் மென்பொருளை இண்டெல் நிறுவனத்துக்கு இவர் விற்று விட்டார்.    இவர் 47 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துள்ளார்.   கடந்த ஞாயிறு அன்று ஜான் தனது டிவிட்டரில் இனி அமெரிக்க அரசை எதிர்த்து தாம் பேசியதால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனப் பதிந்திருந்தார்.

இந்நிலையில் ஜான் தனது சிறை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இவர் தனது சிறை அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதாக நீதித்துறை சான்று அளித்துள்ளது.  இவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

More articles

Latest article