அமெரிக்காவில் ஜனவரி 6 அன்று நடந்த கலவர வழக்கில் முதல் தண்டனை பெற்ற பெண்

Must read

வாஷிங்டன்

டந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கலவர வழக்கில் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த பெண் முதல் தண்டனை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி இறங்காமல் நாட்களைக் கடத்தி வந்தார்.  மேலும் அவர் சமூக வலைத் தளங்கள் மூலம் தனது தோல்வி செல்லாது எனவும் இது அநீதி எனவும் பதிவிட்டு மக்களை அரசுக்கு எதிராக தூண்டியதாகவும் கூறப்பட்டது.  இந்த பதிவுகளால் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் கடும் கலவரம் செய்தனர்.  இதில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

இதையொட்டி சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதில் முதல் கட்டமாகச் சிறிய அளவில் குற்றச்சாட்டு உள்ளவர்களை விசாரித்துத் தண்டிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   இதில் முதல் தண்டனை இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த அன்னா மோர்கன் லாயிட் என்னும் பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் அவற்றை ரத்து செய்து இவர் தலைமை செயலகத்தில் கலவரம் நடத்திய ஒரே குற்றச்சாட்டின் பேரில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் இவர் 120 மணி நேரம் சமூக சேவை செய்யவேண்டும் எனவும் 500 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அன்னா, “நான் நீதிமன்றம், அமெரிக்க மக்கள் மற்றும் எனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன்.  நான் அதிபர் டிரம்புக்கு அமைதியான முறையில் எனது ஆதரவைத் தெரிவிக்க வந்தேன்.  அது வன்முறையாக வெடித்ததற்கு நான் வெட்கப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

அவருடன் இந்தியானாவில் இருந்து வந்த அவருடைய நண்பரான சிகை அலங்கார நிபுணர் டோனா சூ பிஸ்ஸி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது அனுமதி இன்றி தலைமைச் செயலக அலுவலகத்தில் நுழைய முயன்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 

More articles

Latest article