டில்லி:
‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கார்னி சேனா அமைப்பு தீவிரமாக போராடி வருகிறது. இந்த வகையில் அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மக்ரனா உச்சக்கட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார்.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ வீரர்கள் தங்களது ஒரு நாள் மெஸ் உணவை புறக்கணிக்க வேண்டும் என்றும், ஒரு நாள் ஆயுதங்களை கீழே போட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அவர் மீதும், அந்த அமைப்பின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கருத்துக்காக மத்திய உள்துறை அமைச்சகம் கார்னி சேனா அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்.
அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தற்போது ராணுவம் தொடர்பாக அந்த அமைப்பினர் கூறிய கருத்துக்களை ஓட்டு வங்கிக்காக பிரதமர் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க கூடாது என்று சமூக வலை தளங்களில் கருத்துக்கள் வைரலாகி வருகிறது.