திருப்பத்தூர்:
குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆம்பூரில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதியரசர்கள் கொச்சைப்படுத்தி பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சி சார்பில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மற்றும் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சில தினங்களுக்கு முன்பாக துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய துக்ளக் உன்னுடைய ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லோரும் கை கால்களை பிடித்து தான் பதவிக்கு வருகிறார்கள் என்று நீதியரசர்கள் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊடகங்களில் இந்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது எனவே நீதித்துறையின் மாண்பைக் கெடுகின்ற விதத்தில் பேசிய துக்ளக்கில் உடைய ஆசிரியர் குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தில் அரசியலில் எந்தவித பொறுப்பிலும் சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இல்லாமல் தமிழகத்தில் ஒரு துக்ளக் தர்பாரை நடத்தி கொண்டிருக்கிறார் அதிமுகவை உடைக்க ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையோடு முன்னிறுத்திய பாஜக துக்லக் கூடிய குருமூர்த்தி போன்றவர்களெல்லாம் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக மரியாதைக்குரிய சில ஆளுமைகள் எல்லாம் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை நான் கேட்டு கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி பாஜகவின் ஊடகவியாளர் ஆதரவு ஊடகவியாளர் அவரது வாட்ஸ்அப் ஆடியோக்கள் தற்போது மகாராஷ்டிரா அரசினால் வெளியிடப்பட்டிருக்கிறது இந்தியாவினுடைய ராணுவ ரகசியங்களை எல்லாம் அதில் பரிமாறப்பட்டு இருக்கிறது இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய அநீதியை அர்னாப் கோஸ்வாமி இளைத்து இருக்கிறார் ஆதாரங்கள் தெளிவாக பின்பு கூட அவரை கைது செய்வதற்கு ஏன் மத்திய அரசு தயங்குகிறது என்கிற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம் எனவே அர்னாப் கோஸ்வாமி மீது இந்தியாவினுடைய ராணுவ ரகசியங்களை தவறாக பயன்படுத்தியது உட்பட பல்வேறு பிரிவுகளில் அவர் கைது செய்து சிறையில் அடைத்து மத்திய அரசை கோரிக்கை விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தென் மாவட்டங்கள் எல்லாம் இப்பொழுது வெள்ளத்தினால் மிகுந்து கொண்டிருக்கிறது ஒரு வார காலமாக பெய்த மழையினால் நெல்லை மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தூத்துக்குடி விருதுநகர் நாகப்பட்டினம் தஞ்சை புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது பல லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகள் மிகப் பெரிய சோதனையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே புரவி புயல் போன்ற புயலின் காரணமாக ஏற்கனவே விவசாயிகள் நஷ்டம் அடைந்த காரணத்தினால் இதுவரையிலும் ஏமாற்றி வந்தது போல் இல்லாமல் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தினை தெரிந்து மத்திய அரசின் நிவாரண தொகுதியிலிருந்து தமிழக அரசின் நிவாரணத்தில் இருந்தும் அந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டை அறிவித்திட வேண்டும் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் இதில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்