சென்னை

ன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்கின்றனர்.

பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தவிர, மாநகராட்சிகளில் 4 உறுப்பினர்கள், நகராட்சிகளில் 18 உறுப்பினர்கள், பேரூராட்சிகளில் 196 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள பதவிகளுக்குத் தேர்தல் நடத்தி 22 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி  பெற்றுள்ளது.  இன்று காலை வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர்.    இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்களுக்கு, அந்தந்த அமைப்புகளின் ஆணையர்களும், பேரூராட்சியில் செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர். இதில் ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் தனித்தனியாக பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்க உள்ளனர்.