சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 4 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி 129 இடங்களைக் கைப்பற்றி, தேர்தலில் முத்திரை பதித்தது. இதை யடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கியது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என கூறி தனித்தே களம் கண்டது. இந்த நிலையில், இதுவரை 4 பேர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பர்வேஷ் முகமது வெற்றி பெற்றுள்ளார். பர்வேஷின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடனே, விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 16-வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் வெற்றி பெற்றுள்ளார்.