சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை (பிப்.17 ) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வடைவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், திமுக கூட்டணியாகவும், அதிமுக, பாஜக, நாம் தமிழர், அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன., தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கனா பிரசாரம், வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைவதாக அறிவித்துள்ளது. மேலும், , குறிப்பிட்ட நேரத்துடன் பரப்புரை முடிவதை அதிகாரிகள் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது
தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.