டெல்லி: ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு  2021 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்திய வன சேவைக்கான ஐஎஃப்எஸ் (IFS)  முதன்மை தேர்வு அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  இன்று  தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. காலியாக உள்ள 90 இடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 https://upsc.gov.in/என இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நடைபெறும் தேர்வுகள் காலை 9 மணி முதல் 12 வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், நீல நிறம், சிவப்பு நிறம் கொண்ட பேனாக்கள் உபயோகப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பென்சில் மற்றும் மை பேனாக்கள் வைத்து எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.