11 புறாக்களை கல்லால் அடித்துக் கொன்ற உ.பி. இளைஞன்..
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தை சேர்ந்த தரம்பால் சிங், புறாக்கள் வளர்த்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராகுல் சிங், எப்போது பார்த்தாலும் தரம்பால் வீட்டு வாசலில் எச்சில் துப்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.
’’வீட்டு வாசலில் எச்சில் துப்பாதே’’என ராகுல் சிங்கை, தரம்பால் பலமுறை கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்றும் ராகுலை, தரம்பால் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராகுல் சிங், அன்று இரவு கூறை வழியாக ஏறி தரம்பால் வீட்டுக்குள் குதித்துள்ளான். அங்குள்ள கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புறாக்களைத் திறந்து விட்டு, அவற்றைக் கல்லால் அடித்துக் கொன்றுள்ளான்.
இரக்கமே இல்லாமல் 11 புறாக்களை ராகுல் சிங், கொன்று குவித்த நிலையில், அவை செத்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து போலீசார் ராகுல் சிங் மீது வழக்குப்பதிவு செய்து, அவனைத் தேடி வருகிறார்கள்.
-பா.பாரதி.