விளையாட்டு வினையானதே. கம்பி எண்ணவைத்த கஞ்சா…

உத்திரபிரதேசத்தின் மியாகன்ஞ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்.  இவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று கூறி சில இலைகள் ஒரு பாக்கெட்டில் அடைத்துக்  கொடுத்துள்ளார்.  அதை வாங்கிய அக்குடும்பத்தினர் கிஷோர் சொன்னதை உண்மையென நம்பி அதனைச் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.  இதனைக் கண்டு அருகில் உள்ளவர்கள் பதறிப்போய் அவர்களை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கஞ்சா இலைகளைச் சாப்பிட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.  அதிகளவில் கஞ்சா எடுத்துக்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.  மேலும் அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் கிஷோரை அழைத்துக் கேட்ட போது கிஷோர் அதனை விளையாட்டிற்காகக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அறிந்த போலீஸார் கிஷோரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா