பிஜ்னோர், உ.பி.

மேற்கு உத்திரப் பிரதேச கரும்பு விவசாயிகள் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேற்கு உத்திரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது.   அதே நேரத்தில் இங்குள்ள விவசாயிகள் கரும்புக்கு விலையை அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ. 400 அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால் உபி அரசு சென்ற வருட விலையான ரூ.315 ஐ அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே அளித்த கரும்புகளுக்கான பாக்கித் தொகையும் நிலுவையில் உள்ளது.    கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.    ஆனால் பல மாதங்களாகியும் அளிக்கப்படவில்லை.    மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது இந்த நிலுவைத் தொலை உடனடியாக வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.

அதை ஒட்டி உபி அரசு நிலுவைத் தொகையில் பாதி அளவுக்கு உடனடியாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தது.     ஆனால் வரும் 11 ஆம் தேதி இம்மாநிலத்தில் முதல் கட்ட வாக்களிப்பு நடைபெறும் நிலையில் இது வரை பலருக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.    இதை ஒட்டி பிஜ்னோர் தொகுதி கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

அப்போது  அங்குள்ள விவசாயிகள் மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை வன்மையாக கண்டித்து பேசி உள்ளனர்.    இந்த பகுதியை சேர்ந்த விஜய் பால் வர்மா என்னும் விவசாயி கடந்த 5 வருடங்களில் ஒரு முறை கூட அந்த தொகுதி மக்களவை உறுப்பினர் தொகுதிக்கு வராததை கடுமையாக கண்டித்துள்ளர்.

இந்தப் பகுதியில் உள்ள ஜாட்,  இஸ்லாமியர், தலித் என பல பிரிவினரும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.   அனைவரும் சேர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.   இதே நிலை முசாபர்நகர் உள்ளிட்ட அனைத்து மேற்கு உத்திரப்பிரதேசத்திலும் நடந்துள்ளது.   அனைத்து பகுதியினரும் பாஜக அரசு தங்கள் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே இம்முறை அவர்கள் அந்த பகுதியில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.     இந்த பகுதியில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை விட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

ரா ஜ த கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் சரண்சிங் மகனுமான அஜித் சிங் தனது தேர்தல் பிரசார கூட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரதமர் சொன்னது போல் ”அச்சே தின்” (நல்ல நாள்) அவர்களுக்கு க்டைத்தத என கேட்டுள்ளார்.   அப்போது அவர்கள் ”சென்ற முறை மோடிக்கு ஹாய் ஹாய் தற்போது பை பை” என குரல் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து உ பி மாநில அரசியல் ஆர்வலர் ஒருவர், “கரும்பு விவசாயிகள் அனைவருக்கும் சர்க்கரை விருந்து அளிப்பார்கள்.  இம்முறை பாஜகவுக்கு கசப்பு மருந்து அளிக்க உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.