ரெயிலை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

Must read

லக்னோ:

உ.பி.யில் ரெயிலை தவறான பாதையில் கொடி அசைத்து அனுப்பிய ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உ.பி. மாநிலம் சாப்ரா-வாரணாசி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபாஃப்னா நிலையத்திலிருந்து காசியாபூரை நோக்கி செல்ல வேண்டிய ரெயிலை ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டே மாற்று பாதையில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். ரெயில் மாற்றுப்பாதையில் சென்றுகொண்டிருப்பதை அறிந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஃபாஃப்னா ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த ரெயில் டிரைவர் 25 நிமிடங்களுக்கு பிறகு சரியான பாதையில் சாப்ரா-வாரணாசி எக்ஸ்பிரஸ் ரெயில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டேவை சஸ்பெண்ட் செய்து ரெயில்வே மேலாளர் உத்தரவிட்டார்.

 

More articles

Latest article