லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மத்திய அரசு அளித்த தளர்வுகளுக்கேற்ப திறக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருவதற்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறந்து வருகின்றன.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8 ஆகிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அனைத்து மாணவர்களும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே வகுப்பறைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறி உள்ளனர்.