டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பை  பற்றுள்ளது. 66.61 சதவிகித வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. இதனால் சமாஜ்வாதியின் வெற்றி உறுதியாகி உள்ளது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் இறந்ததைத் தொடர்ந்து, அவரது தொகுதியான ன்புரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மேலும்,  உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர், பிகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

மதியம் 12மணி நிலவரப்படி, உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி உறுதியாகி உள்ளது. அதுபோல சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற  இரு தொகுதிகளில் ஒன்றில் சமாஜ்வாதி கட்சியும், மன்றொன்றில் ராஷ்டிரிய லோக்தள் கட்சியும் முன்னணியில் உள்ளது.

பீகாரில் ஜனதாதள் முன்னிலையில் உள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது.

ஒடிசாவில் பிஜு ஜனதாதள் கட்சி முன்னணியில் உள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.