சுல்தான்பூர்:

சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர் கலிம். இவரை கொன்று புதைத்து விடுவதாக மாநில பாஜகவினர் மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரளாகி வருகிறது.

சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் இந்த வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளூர் பாஜக தலவைர் ஷ்ரவன் மிஸ்ரா, நூர் கலிமை, ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு மிரட்டுவது தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த் வீடியோவைப் பகிர்ந்த, உள்ளூர் பத்திரிகையாளர் தெரிவிக்கையில், நூர் கலிம் ஒரு சிஆர்பிஎஃப் வீரர். அவர் காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் மருமகனும் இந்திய ஆயுதப்படைகளுடன் உள்ளனர். இந்த நிலையில், அவர் தனது கிராமத்தில் ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்தார். இதற்கான பணிகளை அவர் தொடங்கிய போது, ​பாஜகவின் தொகுதித் தலைவர் ஷரவன் மிஸ்ரா, அடியாட்களுடன் வந்து, கலிமை வீடு கட்டக் கூடாது என்றும், தனது எச்சரிக்கையையும் மீறி இந்த இடத்தில் வீடு கட்டினால், கலிமை அந்த இடத்திலேயே கொன்று புதைத்து விடுவதாக மிரட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் மிரட்டப்பட்டது குறித்த் செய்தியாளர்களிடம் பேசிய கலித், அவர் என்னை உயிருடன் அடக்கம் செய்வதாக மிரட்டினார் என்றும், அவர் என் வீட்டை இடித்தார் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், நாங்கள் வீரர்கள், நாட்டிற்காக போராடுகிறோம். யாருடனும் சண்டையிட கிராமத்திற்கு வரவில்லை. மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு மருமகன் உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆயுதப் படையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து உள்ளூர் போலீசாரிடம் போலீஸ் புகார் ஒன்றை பதிவு செய்ததாக கலீம் கூறினார்.

இதுகுறித்து சுல்தான்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த விவகாரத்தில் வாதியின் எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில், வழக்கு எண் 408/20 பிரிவு -147 / 427/504/506 ஐ பதிவு செய்வதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்த போதும், இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.