
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி முன்னிலையில் இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி. ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதோடு அந்தப் பெண்ணின் மகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக இவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு வழக்கும் இவர் மீது உள்ளது.
இப்போது தலைமறைவாக இருக்கும் காயத்ரி பிரஜாபதி தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அமேதி தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel