உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லகிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மத்திய மந்திரி மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் லகிம்பூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், உ.பி.யில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.
Patrikai.com official YouTube Channel