லக்னோ,

யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உ.பி.யில் அத்தி மரங்களை வெட்ட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், பாரதியஜனதா அரசின் இந்த ஆணை கார்ப்பரேட்டுகளின் கைங்கரியம் என்பது தெளிவாகிறது.

அத்தி மரம்- இந்தியாவின் அபச குணம், அமங்கலம் என்று  அந்த மரத்தை வெட்ட உ.பி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முதல்வரின் இந்த ஆணை முட்டாள்தனமானது என்பதுடன்,  இந்தியாவின் மேன்மைமிக்க, மருத்துவ சக்தி வாய்ந்த,  பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அத்திமரம் தரும் அருட்கொடையான அத்திப்பழத்தை அய்ல்நாட்டுக்காரனுக்கு அடகு வைக்க தீர்மானித்திருப்பதே இதற்கு காரணம்.

மாட்டுக்கறி தடைக்கும் மிருக வதைக்கும் சம்மந்தமில்லாதது போல அத்திக்கும் அசுபத்திற்கும் சம்மந்தமே இல்லை.

அத்திப் பழம் மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இரும்பு சத்து, ஆண்மை குறைபாடுகள், பெண்களின் பல பிரச்சினைகளை போக்கும் மருத்துவ சக்தி இதில் உள்ளது.

அத்திப்பழத்தில் இரு வகை உள்ளது.

1) சீமை அத்திப் பழம்

2) நாட்டு அத்திப் பழம்.

இதில் சீமை அத்திப்பழம் வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இது பார்ப்பதற்கு பெரிய அளவிலும், அதை உலர வைத்து வட்டம் வட்டமாக சிலைஸ் செய்யப்பட்டு டப்பாக்களில் அடைக்கப்பட்டும், தேனில் ஊற வைக்ககப்பட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், நமது நாட்டி அத்திப்பழம் சிறியதாக இருக்கும். இதில்தான் மருத்துவக்குணங்கள் அதிகம் உண்டு.

நமது நாட்டு மருத்துவக்குணமுள்ள அத்திப்பழத்தை அடியோடு ஒழிக்க வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு சதியில் தற்போது, நாட்டை ஆளும் பிஜேபி அரசு சிக்கிக்கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்துதான் இந்தியாவில் அத்திப்பழத்தை அள்ளித்தரும் மரங்களான அத்திமரத்தை அடியோடு அழிக்க முன்வந்துள்ளது.

தங்களது வெளிநாட்டு அத்திப்பழங்கள் இந்தியாவில் சந்தையை பிடிக்க வேண்டுமென்றால், உள்நாட்டு அத்திப்பழத்தை காலி செய்ய வேண்டும்.

இதையொட்டியே, அத்திப்பழத்தை தரும் மரத்தை அடியோடு ஒழித்துவிட்டால் தங்களுக்கு போட்டி இல்லை என்று எண்ணத்தில், அதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டு, அதற்கு முதல் பலிகடாவாக சாமியார் யோகி ஆதித்யநாத்தை பிடித்துள்ளது.

அவரும், அத்திமரம் அசுபம், அபத்தம் என்று உளறிக்கொண்டு பல்லாண்டு காலமாக, நமது நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தந்து வரும் அத்தி மரத்தை அழிக்க உறுதி பூண்டுள்ளார்.

தம்மாத்துண்டு சைஸ் அத்திப் பழத்திற்குள் இருக்கும் அரசியல்/ பொருளாதார சதிகளின் பின்னணியை பார்க்கும்போது, ஏற்கனவே ஆங்கிலேயர்கள் இந்தியார்களை அடிமையாக வைத்திருந்து, நமது இயற்கை செல்வங்களை அள்ளி சென்றதுதான் நினைவுக்கு வருகிறது.

தற்போது மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் ஜிஎஸ்டி வரியில்கூட, அடித்தட்டு மக்களின் கடலை மிட்டாய்க்கு 18 சதவிகித வரி விதித்துவிட்டு, பெரும் பணக்காரர்கள் உண்ணும் பர்கர், பிஸ்ஷா  போன்றவைகளுக்கு 5 சதவிகிதம் மட்டுமே விரி விதித்து, மோடி அரசு, தாங்கள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவது இதன் மூலம் தெரிய வருகிறது.