லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று உ.பி.யின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஊர்க்காவல்ப் படை டிஜிபி சூர்ய குமார் சுக்லா உறுதிமொழி ஏற்ற வீடியோ கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் சேவர்கள் மஞ்ச் என்ற அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சுக்லா பேசுகையில், ‘‘ராம பக்தர்களாகியாய் நாம், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிப்போம்’’ என்று கூறி உறுதிமொழி ஏற்றார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் பலர் இந்த உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் ஒலிக்கிறது. சுக்லாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்களும், எதிர்ப்பும் எழுந்து உள்ளது.