த்ரா

த்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து வந்த  இந்து அமைப்பு தலைவர் தொழிற்சாலை கண்டறியப்பட்டு மூடி சீலிடப்பட்டுள்ளது.

தற்போது  மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா என  அனைத்து மசாலாக்களும் அரைத்து பாக்கெட்டில் அடைக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.   இந்த மசாலாக்கள் போலியானவை எனவும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை எனவும் பல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.   ஆயினும் இந்த மசாலாக்கள் விற்பனை சிறிதும் குறையாமல் நடந்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ரா நகரில் உள்ள நவிப்பூர் பகுதியில் மசாலா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.   இந்த மசாலா தொழிற்சாலை உரிமையாளர் அனூப் வர்ஷனேய் என்பவர் உ பி முதல்வர் யோகியால் கடந்த 2002 ஆம், ஆண்டு தொடங்கப்பட்ட யுவ் வாகினி என்னும் இந்து அமைப்பின் பிரதேச தலைவர் ஆவார்.  இந்த தொழிற்சாலையில் நேற்று திடீர் சோதனை நடந்துள்ளது.

அப்போது உள்ளூர் மசாலா நிறுவனப் பெயர்கள் கொண்ட சுமார் 300 மசாலா பாக்கெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.,  இவை அனைத்தும் கழுதை சாணம்,  வைக்கோல், மற்றும் தரக்குறைவான சாயம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த சோதனையில் இந்த பொருட்கள் ஏராளமாக இங்கு கிடைத்துள்ளன   கைப்பற்றப்பட்டவைகளீல், மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா எனப் பல வகை பாக்கெட்டுகள் இருந்துள்ளன..

இதையொட்டி இந்த தொழிற்சாலை உரிமையாளர் அனூப் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.   இந்த தொழிற்சாலை உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது.   மேலும் இங்கு தயாரிக்கும் பொருட்களும் உரிமம் பெறாதவை ஆகும்.  இந்த தொழிற்சாலை மூடப்பட்டு சீலிடப்பட்டுள்ளது  இந்த மசாலாக்கள் சோதனைக்கு அனுப்பியதில் இதில் உள்ள  பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலக் கேடு உண்டாகும் எனத் தெரிய வந்துள்ளது.