லக்னோ:

ம்பது வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களின் பணித்திறன் குறைந்திருந்தால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது.

உ.பியில் உள்ள  அரசு அலுவலகங்களில், ஊழியர்களின் அலட்சியப்போக்கு  மற்றும் பணித்திறன் குறைவால் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மாநில தலைமை செயலர் ராஜிவ் குமார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் கூடுதல்  செயலர்களுக்கு  ஒரு உத்தரவை அனுப்பியுள்ளார்.

அதில், “அரசு அலுவலகங்களில் பணிபுரியும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களின் பணித்திறன் கண்காணிக்கப்படும். உரிய நேரத்தில் பணிகளை முடிக்காதவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.

2017 மார்ச், 31 அன்று, 50 வயது நிறைவடைந்த ஊழியர்களின் பட்டியலை தயாரித்து, பணியாளர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். தங்கள் துறையில் உள்ள, 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், கட்டாய ஓய்வில் செல்ல, மூன்று மாத, ‘நோட்டீஸ்’  அளிக்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.