க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் குஷ் பவன்பூர் என மாற்றப்படுகிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது.   அப்போது முதல் பாஜக அரசு தொடர்ந்து மாவடங்கள் மற்றும் நகர்களின் பெயர்களை மாற்றி வருகிறது.  குறிப்பாக இஸ்லாமியப் பெயர்கள் கொண்ட ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த பெயர்கள் மாற்றப்பட்டதாகவும் தற்போது அவற்றின் பழைய பெயர்கள் சூட்டப்படுவதாகவும் உபி மால அரசு தெரிவித்துள்ளது.  அவ்வகையில் ஏற்கனவே அலகாபாத் நகருக்கு பிரயாக் ராஜ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  தவிர ஃபைசாபாத் மாவட்டத்துக்கு அயோத்தியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் குஷ் பவன்பூர் என மாற்றப்பட உள்ளது.  அம்மாவட்டத்தின் ஆட்சியர் ரவிஷ் குப்தா, “கடந்த 1300 ஆம் அண்டுகளில் இந்த பகுதியின் பெயர் குஷ் பவன்பூர் என இருந்துள்ளது.  இந்த மாவட்டத்துக்கு ராமரின் மகனான குசனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இது பழைய ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் போது இந்த பகுதிக்கு சுல்தான்பூர் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  இதற்கான ஆவணங்கள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.  இந்த ஆதாரங்களின்படி மாவட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த பெயர் மாற்றத்துக்கு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.